அன்றாட வழக்கம்

மாற்ற முடியாதவற்றைச் சுற்றி உங்கள் நாளைத் திட்டமிடுங்கள்

சில நல்ல விஷயங்களைச் செய்ய ஆசை, ஆனால் வேலையும் உணவும் பள்ளிப் பயணமும் நாளை நிரப்பிவிடுகின்றன.

காலை ஒளியில் கதவருகில் சிறிது நிற்கும் ஒருவர்.

முடியும் நேரம் தொடங்கும் நேரத்தைவிட முன்னதாக இருந்தால், அதை மறுநாள் நேரமாகக் கருவி எடுத்துக்கொள்ளும்.

மாற்ற முடியாத கடமைகள் (வேலை, பிள்ளைகளைப் பள்ளிக்குக் கூட்டிச் செல்வது, தள்ளிப்போட முடியாத உணவு நேரம்)
சேர்க்க விரும்பும் செயல்கள்

ஒரு நாளில் உண்மையில் எவ்வளவு பொருந்தும் என்று பார்க்க இந்தக் கருவி உதவுகிறது. மாற்ற முடியாத பகுதிகளை முதலில் சேருங்கள். பிறகு செய்ய விரும்பும் சில விஷயங்களைச் சேருங்கள். மிஞ்சும் இடைவெளிகளில் கருவி அவற்றை வைக்கும்.

இந்தக் கருவி என்ன செய்கிறது?

உங்கள் நாள் எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என்று குறிக்கிறீர்கள். பிறகு வேலை, பிள்ளைகளைப் பள்ளிக்குக் கூட்டிச் செல்வது, குடும்ப உணவு போன்ற மாற்ற முடியாத கடமைகளை அவற்றின் நேரத்துடன் எழுதுகிறீர்கள். கடைசியாக, நடைப்பயிற்சி, வீட்டுக்கு ஓர் அழைப்பு, சில அமைதியான நிமிடங்கள் போன்று சேர்க்க விரும்புவதை, ஒவ்வொன்றுக்கும் ஆகும் நேரத்துடன் எழுதுகிறீர்கள்.

ஒன்றின் மேல் ஒன்று வரும் கடமைகளைக் கருவி இணைக்கிறது. அவற்றுக்கு இடையிலான காலி இடைவெளிகளைக் கண்டு, ஒவ்வொரு செயலையும் முழுமையாகப் பொருந்தும் முதல் இடைவெளியில் வைக்கிறது. உங்கள் திட்டம் எளிய கால அட்டவணையாகத் தெரியும். அதை நகலெடுக்கலாம் அல்லது அச்சிடலாம்.

நாள் மிகவும் நிரம்பியிருந்தால்?

கருவி அதை வெளிப்படையாகச் சொல்லும். நீங்கள் கேட்ட நிமிடங்கள், நாளில் உண்மையில் உள்ள காலி நேரம், இடம் கிடைக்காத செயல்கள் ஆகியவை தெரியும். பிறகு நீங்களே முடிவு செய்யலாம்: ஒன்றைச் சுருக்கலாம், ஒன்றை வேறு நாளுக்கு மாற்றலாம், அல்லது ஒன்றை விட்டுவிடலாம். இல்லாத நேரத்தில் எந்தச் செயலையும் கருவி திணிக்காது.

இதை எப்படிப் பயன்படுத்துவது?

இந்தப் படிகளைப் பின்பற்றினால் சில நிமிடங்களில் உங்கள் நாளின் படம் கிடைக்கும்.

  1. உங்கள் நாள் தொடங்கும், முடியும் நேரங்களைக் குறியுங்கள்.
  2. மாற்ற முடியாத கடமைகளை அவற்றின் நேரத்துடன் சேருங்கள்.
  3. செய்ய விரும்பும் இரண்டு மூன்று விஷயங்களை, ஒவ்வொன்றுக்கும் நிமிடங்களுடன் சேருங்கள்.
  4. ‘என் நாளை உருவாக்கு’ என்பதை அழுத்துங்கள்.
  5. கால அட்டவணையைப் படியுங்கள். ஏதாவது பொருந்தவில்லை என்றால், அதைச் சரிசெய்து மீண்டும் அழுத்துங்கள்.

நடைமுறை நாட்களுக்குச் சில குறிப்புகள்

நெரிசலில் வீடு திரும்பும் நீண்ட பயணம் போல, பயணம் நாளின் ஒரு நிலையான பகுதியை எடுத்துக்கொண்டால், அதையும் கடமையாகச் சேருங்கள். உணவு நேரம் தாமதமாவது வழக்கம் என்றால், நீங்கள் நினைப்பதைவிடச் சற்று அதிக நேரம் கொடுங்கள். இடைவெளியே இல்லாத நாளில், மூன்றுக்குப் பதில் ஒரு சிறிய செயலைத் தேர்ந்தெடுங்கள்.

வேலை நேரம் வாரத்துக்கு வாரம் மாறினால், ஒரு நாளை மட்டும் திட்டமிடுங்கள். காகிதத்தில் அழகாக இருக்கும் முழு வாரத்தைவிட, இன்று பின்பற்ற முடியும் திட்டமே மேல்.

உங்கள் தனியுரிமை

உங்கள் நாளைப் பற்றி நீங்கள் எழுதுவது எங்கும் அனுப்பப்படுவதில்லை. இந்த அட்டவணை உங்கள் சாதனத்தின் உலாவியில் மட்டுமே தயாராகிறது, பக்கத்தை மூடினால் அழிந்துவிடும்.

அடுத்து என்ன?

வாரம் முழுவதற்குமான படிப்புக்கு வீட்டுப் படிப்புத் திட்டம் கருவியைப் பாருங்கள். நாளின் வேலைப் பகுதியைத் தெளிவாக நிறைவு செய்ய வேலை நாள் நிறைவு கருவி உதவும். நாளின் கடைசிப் பகுதிக்கு இரவு அமைதித் திட்டம் உதவும். அன்றாட நாட்களுக்கு மேலும் யோசனைகள் வேண்டுமானால், அன்றாட வாழ்வில் மனக்கவனம் என்ற பிரிவைப் பாருங்கள்.

நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகள்

எதை எங்கே வைப்பது என்று கருவி எப்படி முடிவு செய்கிறது?

முதலில் நாளில் மாற்ற முடியாத பகுதிகளைக் குறிக்கிறது. இரண்டு கடமைகள் ஒன்றின் மேல் ஒன்று வந்தால், அவை ஒருமுறை மட்டுமே கணக்கில் வரும். பிறகு மிஞ்சும் இடைவெளிகளைப் பார்த்து, நீங்கள் எழுதிய வரிசையில் ஒவ்வொரு செயலையும் முழுமையாக, போதுமான நீளமுள்ள முதல் இடைவெளியில் வைக்கிறது.

கையிலுள்ளதைவிட அதிக நேரம் கேட்டால் என்ன ஆகும்?

கருவி அதைச் சொல்லும். நீங்கள் கேட்ட நிமிடங்கள், நாளில் உண்மையில் உள்ள காலி நேரம், இடம் கிடைக்காத செயல்கள் ஆகியவற்றைக் காட்டும். செயல்களைச் சுருக்கவோ கடமைகளின் மேல் அடுக்கவோ செய்யாது.

இரவு ஷிஃப்டுக்குப் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தலாம். உங்கள் நாள் நள்ளிரவுக்குப் பிறகு முடிந்தால், முடியும் நேரத்தைத் தொடங்கும் நேரத்தைவிட முன்னதாக வையுங்கள். கருவி அதை மறுநாள் நேரமாக எடுத்துக்கொள்ளும். நள்ளிரவைக் கடக்கும் கடமைகளுக்கும் இதே முறைதான்.

என் நாள் சேமிக்கப்படுமா, எங்காவது அனுப்பப்படுமா?

இல்லை. திட்டம் உங்கள் உலாவியிலேயே உருவாகிறது. எதுவும் சேவையகத்துக்கு அனுப்பப்படுவதில்லை. அதை நகலெடுக்கலாம் அல்லது அச்சிடலாம். பக்கத்தை மூடியதும் அது மறைந்துவிடும்.

நீங்கள் சேர்க்க விரும்புவதில் ஓர் அமைதியான இடைவேளையும் இருந்தால், சிறிய இடைவெளிக்குச் சத்குருவின் இலவச ஏழு நிமிட வழிகாட்டப்பட்ட தியானம் ஒரு வழி.

7 நிமிட தியானம்